Theme Check

பிரதமரின் மனைவி கார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. சாலையில் நடந்த பரபரப்பு சம்பவம் !!

பிரதமரின் மனைவி கார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. சாலையில் நடந்த பரபரப்பு சம்பவம் !!

பிரதமரின் மனைவி கார் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. சாலையில் நடந்த பரபரப்பு சம்பவம் !!
X

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டனுமானவர் இம்ரான் கான். இவர் பிரிட்டிஷ் - பாகிஸ்தான் வம்சாவளியும் பத்திரிகையாளருமான ரேஹம் கான் என்பவரை கடந்த சில ஆண்டுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். இது இம்ரான் கானுக்கு இரண்டாவது திருமணமாகும். Imran-Khan-Reham-Khan

எனினும் இருவருக்குமான உறவு 10 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில், அதன் பின்னர் இருவரும் பிரிந்தனர். தற்போது தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரேஹம் கான் மீது இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேஹம் கான் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது, சிலர் என்னுடைய கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்; இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அவர்கள், துப்பாக்கியுடன் பின்தொடர்ந்து வந்தனர்.

Imran-Khan-Reham-Khan

என் காரை நிறுத்த முயன்றனர். ஆனால், எனது பாதுகாவலர் மற்றும் டிரைவரின் முயற்சியால் தப்பித்தேன். இதுதான் இம்ரான் கானின் புதிய பாகிஸ்தானா? அவர்கள் கோழைகள், கொள்ளையர்கள், பேராசைபிடித்த மக்களின் நாடு, என காட்டமாக பதிவிட்டுள்ளார்.


newstm.in

Next Story
Share it