டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் !!
டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் !!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாய 217 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை இந்தியா நேற்று தொடங்கியது.
ரோகித் ஷர்மா மற்றும் கில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து ரோகித் 34 ரன்களிலும், கில் 28 ரன்களிலும் அவுட் ஆகினர். புஜாரா 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். கோலி மற்றும் ரகானே 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.

எனினும் இந்த பார்ட்னர்ஷிப் அதிகநேரம் நிலைக்கவில்லை. ஜேமிசன் பந்துவீச்சில் கோலி 44 ரன்கள் எடுத்திருந்தப்போது தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். பின்னர் பண்ட் 4 ரன்களிலும், ரகானே 49 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதிநேரத்தில் அதிரடி காட்டிய அஷ்வின் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இஷாந்த் 4 ரன்களிலும், பும்ரா ரன் ஏதும் எடுக்காமலும், ஜடேஜா 15 ரன்களிலும் அவட்டாகி வெளியேறினார். 92.1 ஓவரில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 217 ரன்களை எடுத்தது இந்தியா.

நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வேக்னர் மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சவுதி ஒரு விக்கெட் எடுத்தார். தற்போது நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி பேட்டிங் செய்து வருகிறது.
newstm.in

