Theme Check

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்: காரணம் என்ன?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்: காரணம் என்ன?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்: காரணம் என்ன?
X

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்.

20-20, ஒருநாள் போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முதல்முறையாக உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சதாம்ப்டன் நகரில் தொடங்கியுள்ளது. தொடர் மழையால் முதல் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. எனினும் இந்த டெஸ்டில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மழை இல்லாததால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. இன்று 98 ஓவர்கள் வீசப்படவுள்ளன.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளருக்கு இடமில்லை. இந்த நிலையில் களமிறங்கிய இந்திய வீரர்கள் அனைவரும் கையில் கருப்புப் பட்டை அணிந்துள்ளனர். இந்நிலையில் இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். 91 வயது மில்கா சிங், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவர். 400 மீ. ஓட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர். 1960 ரோம் ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீ. ஓட்டத்தில் 4ஆம் இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டார். இந்த நிலையில் அவரது இறப்பையொட்டி இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it