வாடகை காரில் வழிமாறி சென்ற அஜித்! ஓட்டுநருக்கு நடந்த அர்ச்சனை!

வாடகை காரில் வழிமாறி சென்ற அஜித்! ஓட்டுநருக்கு நடந்த அர்ச்சனை!

வாடகை காரில் வழிமாறி சென்ற அஜித்! ஓட்டுநருக்கு நடந்த அர்ச்சனை!
X

காவல் ஆணையர் அலுவகத்திற்கு வழிமாறி வந்த நடிகர் அஜித்துடன் நான், நீ என போலீஸ்கார்களும் பொதுமக்களும் மாறி மாறி செல்ஃபி எடுக்க முயன்றதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் அஜித்துக்கு சினிமாவை கடந்து பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, சிறியரக விமானங்களை இயக்குதல் போன்ற செயல்பாடுகளில் அதிகம் ஆர்வம் உண்டு. ஷூட்டிங் இல்லையென்றால் இவற்றில் ஏதோவொரு செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட துவங்கிவிடுவார்.இந்த வரிசையில் தற்போது அஜித்தின் ஆர்வங்களில் ஒன்றாக மாறிப்போயுள்ளது துப்பாக்கி சுடுதல் பயிற்சி. இதற்காக சென்னை ரைஃபிள் கிளப்பில் அவர் உறுப்பினராக உள்ளார். அவ்வப்போது மாநில அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றும் வருகிறார்.

சென்னையில் எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தின் உள்ளே சென்னை ரைஃபிள் கிளப் உள்ளது. அங்கு அடிக்கடி வரும் நடிகர் அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. ஆனால் அவர் அங்கு வருவதும் போவதும் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவர் வேப்பேரியில் உள்ள புதிய காவல் ஆணையத்திற்கு வந்துள்ளார். துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ள தேவையான கருவிகளை அவர் எடுக்கும் போதுதான் வந்திருப்பது அஜித் என அங்கிருந்த போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது.உடனடியாக அவரை அணுகி காவலர்கள் செல்ஃபி எடுக்க முயன்றனர். மேலும், சில பொதுமக்களும் அவருடன் சென்று செல்ஃபி எடுக்க முண்டி அடித்தனர். அப்போதுதான் எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பதிலாக, தான் வேப்பேரி அலுவலகத்திற்கு வந்திருப்பது தெரிந்தது.

மேலும், நடிகர் அஜித் அங்கு வாடகை காரில் வந்துள்ளார். சொந்தமாக அவர் ஓட்டி வந்திருந்தால் வழிமாறி வந்திருக்க மாட்டார். வாடகைக்கு புக் செய்யப்பட்ட காரை ஓட்டிய ஓட்டுநர், எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பதிலாக வேப்பரி அலுவலகத்தை கூகுள் மேப்பில் போட்டுவிட்டார். அதனால் அஜித் வழிமாறி அங்கு வந்துவிட்டார்.

நிலைமை உணர்ந்துகொண்ட அஜித், வந்த காரிலேயே திரும்பி சென்றுவிட்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். எனினும், அவர் திரும்பி எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி அந்த வாடகை கார் ஓட்டுநர் அஜித்திடம் நன்றாக அர்ச்சனை வாங்கி இருப்பார்.


Tags:
Next Story
Share it