Theme Check

உங்கள் அன்புக்கும், கனிவுக்கும் நன்றி.. வைரலாகும் அஜித் எழுதிய கடிதம்..!

உங்கள் அன்புக்கும், கனிவுக்கும் நன்றி.. வைரலாகும் அஜித் எழுதிய கடிதம்..!

உங்கள் அன்புக்கும், கனிவுக்கும் நன்றி.. வைரலாகும் அஜித் எழுதிய கடிதம்..!
X

வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

‘வலிமை’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில், அஜித் - ஷாலினியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வலைதளங்களில் வைரலாகின. அதன்பின்னர், கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது, அங்கு ரசிகர்கள் சிலர் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வந்தது.

இந்நிலையில், கேரளாவின் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையமான குருகிருபாவில் நடிகர் அஜித் சிகிச்சை பெற்றுக் கொண்டார்.
கேரளாவில் அஜித் - வைரலாகும் அவரின் நன்றி கடிதம் மற்றும் புகைப்படங்கள்...  பின்னணி என்ன? | Ajith writes thank you letter to his Kerala treatment team
சிகிச்சை முடிந்த பிறகு, குருகிருபா மையத்தின் சிகிச்சை முறைக்கு நன்றி தெரிவித்தும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தும் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அவர்களிடம் வழங்கி உள்ளார்.

தற்போது, நடிகர் அஜித்தின் கையெழுத்து கொண்ட அந்த கடிதம்தான் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆயுர்வேத சிகிச்சை, ஆன்மிக தரிசனம் - நடிகர் அஜித்தின் கேரள விசிட் | actor  ajith visit kerala Guruvayoor Temple and get ayurvedha treatment -  hindutamil.in

Next Story
Share it