அந்த ஒரு ஓட்டு.. திருமங்கலம் நகராட்சியில் மறு வாக்குப்பதிவு !!
அந்த ஒரு ஓட்டு.. திருமங்கலம் நகராட்சியில் மறு வாக்குப்பதிவு !!

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கியது. நேற்று இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்குள்ள 17 ஆவது வார்டுக்குட்பட்ட பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்களில் கள்ள வாக்கு பதிவாகி உள்ளதாக வேட்பாளர்கள் தரப்பில் புகார் எழுப்பப்பட்டது.
அதாவது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், ஊரில் இல்லாதவர்கள் பெயரில் வாக்குப்பதிவு செலுத்தப்பட்டதாகவும் வேட்பாளர்களின் முகவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் சர்ச்சை எழுந்த நிலையில், வேட்பாளர்களின் முகவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. புகாரை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் டெரன்ஸ் லியோன் மறு வாக்குப்பதிவு நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 17வது வார்டில் மறு வாக்குப்பதிவிற்கான தேதி குறிப்பிடப்படாத நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவு நடைபெறும் தேதியை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை திருமங்கலம் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளில் திமுக 23-லும் கூட்டணி கட்சிகள் 4 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. அதிமுக 27 வார்டுகளிலும் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சுயேச்சைகள், போட்டி வேட்பாளர்களும் நிற்கின்றனர்.
newstm.in

