Theme Check

பாய்கிறது நடவடிக்கை.. இனி இவர்களுக்கு ரேசன் பொருள்கள் கிடையாது?

பாய்கிறது நடவடிக்கை.. இனி இவர்களுக்கு ரேசன் பொருள்கள் கிடையாது?

பாய்கிறது நடவடிக்கை.. இனி இவர்களுக்கு ரேசன் பொருள்கள் கிடையாது?
X

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேசன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா காலத்தில் மட்டும் ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசு சார்பில் இலவமாக ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன.

தற்போது மத்திய அரசு, நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்களது ரேசன் கார்டை பயன்படுத்தி ரேசன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டம் தற்போது அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ration

அதேநேரத்தில், பல இடங்களில் ரேசன் பொருட்கள் தொடர்பாக புகார் கூறப்படுகிறது. அதாவது, ரேசன் பொருட்களை தகுதியற்றவர்கள் பெற்று கள்ள சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகிறார்கள் என்பதுதான் அந்த புகார்.

அதனால் ரேசன் பொருட்கள் தகுதி உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தகுதி உள்ளவர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதையும், தகுதியற்றவர்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைப்பதை தடுக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ration

அதனால் விரைவில் ரேசன் பொருட்கள் வழங்குவதில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தகுதியற்றவர்களுக்கு ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படும்.

newstm.in

Next Story
Share it