ரம்ஜானுக்கு ஏமாற்றாத நடிகர்! தியேட்டர், ஓடிடி என ஒரே ரிலீஸ்!

ரம்ஜானுக்கு ஏமாற்றாத நடிகர்! தியேட்டர், ஓடிடி என ஒரே ரிலீஸ்!

ரம்ஜானுக்கு ஏமாற்றாத நடிகர்! தியேட்டர், ஓடிடி என ஒரே ரிலீஸ்!
X

பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்து முண்ணணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சல்மான் கான்.

சல்மான்கான் வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலம் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்து நடித்தனர். அந்தப் படமே பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. தற்போது அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3வது முறையாக இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராதே படம் 2020 மே மாதம் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.தற்போது மே 13ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அதே நாளில் ஜீ பிளெக்ஸ் ஓடிடியிலும் வெளியிடப்படும் எனவும் இதற்கென தனியாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம் எனவும் தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த ராதே படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரூ. 299 செலுத்தி ஜீபிளெக்ஸ் தளத்திலும் டிடிஎச் (DTH) வழியாகவும் காணலாம்.

ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தா வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்தாமலேயே ராதே படத்தை ஒருமுறை பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் லெட்ஸ் ஓடிடி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

Tags:
Next Story
Share it