தாயிடம் கோபித்துக்கொண்டு வெளியேறிய 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ! 6 இளைஞர்கள் சுற்றிவளைப்பு!
தாயிடம் கோபித்துக்கொண்டு வெளியேறிய 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ! 6 இளைஞர்கள் சுற்றிவளைப்பு!

தாயாரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி 6 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்தப்போது தாயாருடன் சண்டைபோட்டதாக கூறப்படுகிறது. இதில் தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அவர் மும்பைக்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, சார்பாக் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து மும்பைக்கு ரயிலில் சென்றுவிடலாம் என்று அங்கு சென்றுள்ளார். இதற்காக மடியோன் என்ற இடத்திற்கு சென்றப்போது அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல வழிதெரியவில்லை. இதனையடுத்து ரயில் நிலையத்துக்கு எப்படி செல்வது என அங்கிருந்தவர்களிடம் வழிகேட்டுள்ளார். இதனைப் பார்த்த இ-ரிக்ஷா ஓட்டுனரான இக்ரம்தீன் என்பவர் சிறுமியை அணுகி தனியாக இங்கு ஏன் நின்றுகொண்டிருக்கிறீர்கள் என விசாரித்திருக்கிறார்.

அப்போது, வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மும்பைக்கு வேலைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். பின்னர் கிறுக்கு உதவுவது போல் நடித்து இக்ரம்தீன் மடியோன் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அன்று மாலை நண்பர்களை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வரச்சொன்ன இக்ரம்தீன் அந்த 14 வயது சிறுமியை அடித்து துன்புறுத்தி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து மீண்டும் வேறு ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்கும் சிறுமிக்கு இக்கொடூமை நடந்துள்ளது. இதனிடையே சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிறுமியை மடியோன் பகுதியில் இருந்து மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமிக்கு நடந்த கொடூரம் வெளியே தெரிந்ததையடுத்து இக்ரம்தீன், அவரின் நண்பர்கள் உத்தம் சர்மா, ரிதேஷ் யாதவ் ,நசீம், ஷகீல், நூர் முகமது ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in

