Theme Check

பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இளைஞரை பாய்ந்து பிடித்த மோப்ப நாய் 'ராம்போ' !!

பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இளைஞரை பாய்ந்து பிடித்த மோப்ப நாய் 'ராம்போ' !!

பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இளைஞரை பாய்ந்து பிடித்த மோப்ப நாய் ராம்போ !!
X

காரைக்குடி அருகே மந்திரி தோப்பில் இளம் பெண்ணைபாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில், குற்றவாளியை மோப்பநாய் ராம்போ விரைவில் கண்டுபிடித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்துள்ள புதுவயல் அருகே உதயசூரியன்- புவனேஷ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 28 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர், கடந்த 16ஆம் தேதி புளியங்குடியிருப்பு பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் அண்ணதானம் சாப்பிட சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் இரவு முழுவதும் பெற்றோர், உறவினர்கள் தேடி அலைந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மறுநாள் அப்பகுதியில் உள்ள முந்திரிக்காட்டுக்குள் ஆடைகள் களையப்பட்ட நிலையில், மர்மமான முறையில் அப்பெண் இறந்து கிடந்தார். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

காவல்துறையில் உள்ள மோப்ப நாய் ராம்போ முந்திரி காட்டிற்கு வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்தது. அங்கிருந்து குற்றவாளி வாடையை டிராக் செய்த ராம்போ ஊருக்குள் சென்று குறிப்பிட்ட இடத்தில் நின்றது. பின்னர் அங்கிருந்து காவல்துறையினர் விசாரணை தொடங்கினர். அதாவது, சம்பவ நடந்தபின்னர் யார் எல்லாம் குறிப்பிட்ட இடத்துக்குக வந்தனர் என்ற விவரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

murder

அதன்பேரில் 7 பேரை பிடித்து விசாரணை செய்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசிய அப்பகுதியை சேர்ந்த தேவா(20) என்பவரை கைது செய்தனர்.
கூலி வேலை பார்க்கும் தேவா சம்பவத்தன்று அந்தப்பெண கோயிலில் சாப்பிட்டு விட்டு வீட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரிடம் பேச்சு கொடுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், பெண்ணை வலுக்கட்டாயமாக முந்திரிக்காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்தப்பெண் சத்தம்போடவே, கையால் வாயை பொத்தியும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று முந்தி மரம் அருகில் போட்டுவிட்டு, எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சாக்கோட்டை போலீசார் தேவாவிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளியை பிடித்துக்கொடுத்த மோப்ப நாய் ‘ராம்போ‘யை மக்கள் வெகுவாக பாராட்டினர்.

newstm.in

Next Story
Share it