பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு மெரினா கடற்கரைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்: விசாரணையில் பகீர் தகவல் !
பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு மெரினா கடற்கரைக்கு சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்: விசாரணையில் பகீர் தகவல் !

சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 11ஆம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். விசாரணையில், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. பின்னர் பெற்றோரும் போலீசாரும் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில் மெரினா கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் அழுதபடி சுற்றித்திரிந்த ஒரு சிறுமியை, பொதுமக்கள் மீட்டு ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தப்போது, ஏழுகிணறு பகுதியை சேர்ந்த காணாமல்போன சிறுமி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை ஒப்படைத்தனர். அங்கு, சிறுமியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டைவிட்டு வெளியேறி நான் மெரினா கடற்கரைக்கு வந்தேன். அங்கிருந்து எங்கு செல்வது என தெரியாமல் இருந்தேன். அப்போது, அங்கு வந்த பள்ளிக்கரணையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூசா கலிமுல்லா (34), எனக்கு அடைக்கலம் தருவதாக கூறி ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு அடைத்துவைத்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், என்னை மீண்டும் மெரினா கடற்கரை அழைத்து வந்து விட்டுவிட்டு சென்றுவிட்டார் என சிறுமி கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, ஆட்டோ டிரைவர் மூசா கலிமுல்லா குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவரை கண்டுபிடித்தனர். மேலும் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
newstm.in

