Theme Check

கணவர் கண்முன்னே பேராசிரியைக்கு நடந்த கொடூரம் !

கணவர் கண்முன்னே பேராசிரியைக்கு நடந்த கொடூரம் !

கணவர் கண்முன்னே பேராசிரியைக்கு நடந்த கொடூரம் !
X

கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த காவாங்கரை கண்ணப்ப சாமி நகரில் அருண்குமார் - பூஜா தம்பதி வசித்து வருகின்றனர். பூஜா வில்லிவாக்கம் தாதன்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி முடித்துவிட்டு மாலையில் தனது கணவருடன் வீட்டிற்கு பைக்கில் பூஜா சென்று கொண்டிருந்தார். புழல் காவல் நிலையம் ஜி.என்.டி சாலை அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று பைக் மீது திடீரென மோதியுள்ளது.

dsf

இதில் பேராசிரியை பூஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதைப்பார்த்த அவரது கணவர் கண்ணீர் விட்டு தகறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பூஜா உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்து சென்னை மணலியைச் சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

newstm.in

Next Story
Share it