Theme Check

பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்.. சிதறி ஓடிய மக்கள் !!

பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்.. சிதறி ஓடிய மக்கள் !!

பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்.. சிதறி ஓடிய மக்கள் !!
X

பேக்கரியில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மலையப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை. இவர் வத்தலக்குண்டு - உசிலம்பட்டி பிரிவில் உள்ள ஒரு பேக்கரியில் தனியாக நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், திடீரென ஆயுதங்களுடன் சாமிதுரையை சுற்றியது. இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பியோட முயன்றப்போது, விடாமல் பேக்கரிக்கு உள்ளே வைத்தும், வெளியே இழுத்துவந்தும் அக்கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த வெட்டுகாயம் அடைந்த அவர், அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

murder

பட்டப்பகலில் ஏராளமானோர் அந்த பேக்கரி கடை மற்றும் அருகில் உள்ள கடைகளில் நின்றுக்கொண்டிருந்தப்போது நடந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலக்குண்டு போலீசார், சாமிதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாமிதுரையின் உறவினர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

murder

இதைத் தொடர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it