ஏப்ரல் 30ம் தேதி வரை தடை தொடரும்!! மத்திய அரசு அதிரடி!
ஏப்ரல் 30ம் தேதி வரை தடை தொடரும்!! மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கட்டுப்பாடுகளை மத்திய , மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.இந்த வகையில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விமான சேவைக்கான தடை இருந்த போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் மட்டும் வழக்கம்போல் சர்வதேச விமான சேவைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

