Theme Check

கொரோனா காலத்தில்தான் இதன் அருமை தெரிந்தது.. சென்னை ஐகோர்ட் நீதிபதி பாராட்டு..!

கொரோனா காலத்தில்தான் இதன் அருமை தெரிந்தது.. சென்னை ஐகோர்ட் நீதிபதி பாராட்டு..!

கொரோனா காலத்தில்தான் இதன் அருமை தெரிந்தது.. சென்னை ஐகோர்ட் நீதிபதி பாராட்டு..!
X

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த, சென்னை கிண்டி, கிங் ஆய்வு மைய கொரோனா சிறப்பு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் தலைமை வகித்தார்.

விழாவில், கிங் ஆய்வு மைய கொரோனா சிறப்பு மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசுகளை வழங்கி, உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேசியதாவது: “கொரோனா காலத்தில்தான் அரசு மருத்துவமனைகளின் அருமை அனைவருக்கும் தெரிய வந்தது.

கிங் ஆய்வு மையம் போன்ற கொரோனா சிறப்பு மருத்துவமனை மிக சிறப்பாக செயல் பட்டதால்தான், அதிகமான மக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

கொரோனா நோயாளிகளை குடும்பத்தினர், உறவினர்கள்கூட தொடக்கூடாது என்ற நிலையில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, ஆயிரக்கணக்கான நோயாளிகளை காப்பாற்றினர்.

கொரோனா தொற்றால் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் பாதிக்கப்பட்டபோதும், அதுபற்றி கவலைப்படாமல் நோயாளிகளை காப்பாற்றுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட மருத்துவ துறையினரின் சேவை பாராட்டுக்குரியது. இவர்களால்தான் இந்த சமூகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது” என்று அவர் பேசினார்.

Next Story
Share it