Theme Check

அதிமுகவில் விரைவில் நடக்கப்போகும் பெரிய மாற்றம்!?

அதிமுகவில் விரைவில் நடக்கப்போகும் பெரிய மாற்றம்!?

அதிமுகவில் விரைவில் நடக்கப்போகும் பெரிய மாற்றம்!?
X

அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் திமுகவில் சேரப் போவதாக பேசப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் இருக்கும் ராஜ்யசபா எம்.பி ஒருவர் அதிரடி முடிவை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரது பதவிக்காலம் இன்னும் ஆறு மாதங்களில் முடிவடையப் போகிறது. இதற்கிடையில் திமுகவில் சேர்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

அடுத்த ஆறு மாதங்களில் அதிமுகவை சேர்ந்த மூன்று ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவடையப் போகிறது. எனவே இவர்களில் ஒருவராகத் தான் இருக்க முடியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்த நபர் அதிமுக தொடங்கிய காலம் முதலே அக்கட்சியில் செல்வாக்கு பெற்ற நபராக வலம் வந்துள்ளார்.

admk

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயரை பெற்று விளங்கியதால், இவருக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் வழக்குகளை இவர் தான் கவனித்து வந்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.

இவரது விலகல் அதிமுக தலைமைக்கு சற்று அதிர்ச்சிகரமாக தான் இருக்கிறதாம். இவரால் அதிமுகவிற்கு ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது. கட்சிக்கும் எந்தவொரு பயனும் இல்லை. இவர் தமிழகத்தில் முக்கியப் பதவியில் இருந்த போது நடந்த ஊழல்கள் வெளிவராமல் இருக்கவே இப்படி ஆளுங்கட்சிக்கு தாவ முடிவு செய்திருக்கிறார் என்றெல்லாம் விமர்சனக் கருத்துகளை கூறி வருவதாக கட்சிக்குள் கிசுகிசுக்கப் படுகிறது.

அதேநேரம் அந்த ராஜ்யசபா எம்.பியை பிடிக்காத சிலர் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்பி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

newstm.in

Next Story
Share it