வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி!!
வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி!!

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க மாவட்ட நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக் இரண்டு நாட்களுக்கு முன்னர், நிர்மலா யாதவ் (32) என்ற பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பா.ஜ.க நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக், தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தது கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து, ஸ்ரீகாந்த் தேஷ்முக் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து, நிர்மலா யாதவுக்கும், தனக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்ததாகவும் காவல்துறையில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.
அதன்படி காவல்துறையினர் நிர்மலா யாதவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நேரில் வந்து புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க துணைத் தலைவர் சித்ரா வாக் உறுதி அளித்துள்ளார்.
*🦉மகாராஷ்டிராவின் பாஜகமுக்கிய நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக், நிர்மலா யாதவ் என்ற பெண்ணை வேலை வாங்கி தர்ற்தா அப்பாவி பெண்ணை பலாத்காரம் செய்யுவிட்டதை நேரடியாக Facebook பதிவிட்ட பெண்ணின் நிலைமை பாருங்க* pic.twitter.com/ahC6tnlvrK
— SHAFI (@SHAFI39161237) July 12, 2022
newstm.in

