பப்ஜி விளையாடுவதை நிறுத்தசொன்ன தாயை சுட்டுக்கொன்ற சிறுவன் !
பப்ஜி விளையாடுவதை நிறுத்தசொன்ன தாயை சுட்டுக்கொன்ற சிறுவன் !

பப்ஜி விளையாடுவதை கண்டித்ததால், பெற்ற தாயை 16 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் எல்சிடோ குடியிருப்யில் சாதனா என்ற பெண், ராணுவத்தில் பணியாற்றும் தனது கணவர், 16 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் செல்போனை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் அடுத்தகட்டமாக பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதால், கடந்த ஞாயிறு அன்று மகனை தாய் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தந்தையின் துப்பாக்கியால் சாதனாவை சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டுவிழுந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். அதோடுமட்டுமல்லாமல் அறையில் உடலை வைத்துவிட்டு ஏசியை அதிகமாக வைத்துள்ளார். மேலும் துர்நாற்றம் வீசாமல் இருக்க ரூம் பிரஷ்னரையும் அடித்துள்ளார். இதையறிந்த 10 வயது தங்கையை கொன்றுவிடுவேன் என மிரட்டி, 3 நாட்கள் அறையில் பூட்டி வைத்துவிட்டு, நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து மது விருந்துடன் பப்ஜி வைத்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, ராணுவத்தில் பணியாற்றும் சிறுவனின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, சாதனா அழுகிய நிலையில் கிடந்துள்ளார்.
அப்போது, வீட்டுக்கு வந்த எலக்ட்ரீசியன் தான் கொன்றுவிட்டதாக சிறுவன் கூறியுள்ளான். ஆனால், உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரித்த போது, சிறுவன் உண்மை அனைத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பப்ஜி விளையாடியதை தட்டிக்கேட்டதால் தாயையே கொலை செய்துவிட்டு, நாடகம் ஆடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

