Theme Check

மீன் பிடிக்கப் போன சிறுவன்! கழுத்தை துளைத்து பாய்ந்த மீன்!

மீன் பிடிக்கப் போன சிறுவன்! கழுத்தை துளைத்து பாய்ந்த மீன்!

மீன் பிடிக்கப் போன சிறுவன்! கழுத்தை துளைத்து பாய்ந்த மீன்!
X

சில சமயங்களில் நாம் எதிர்பார்க்காத விபரீதங்கள் நொடிப்பொழுதில் நிகழ்ந்து நமது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும். அப்படி, இந்தோனேசியாவில் ஒரு சிறுவன், தனது பெற்றோருடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளான். முகமது இதுல் (16) என்ற அந்த சிறுவன் ஆசையாசையாய் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென, நம்மூர்ல ஊசி மீன் வகையைச் சேர்ந்த மீன் ஒன்று சிறுவன் மீது பாய்ந்தது. அப்படி பாயந்த மீன், உடனடியாக சிறுவனின் கழுத்தில் தனது கூர்மையான ஊசிப் போன்ற வாயினால் குத்தி மறுபக்கம் பாதி வெளியே வந்து நிலையில், மேற்கொண்டு வெளிவர முடியாமல் நின்றுக் கொண்டது.

60 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லக் கூடிய தன்மை வாய்ந்தது இந்த மீன் வகை. உடனடியாக சிறுவனை, அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், 2 மணி நேரம் போராடி மருத்துவர்கள் சிறுவனைக் காப்பாற்றி அந்த மீனை அகற்றினார்கள்.

கழுத்தில் செல்லும் இரத்தக்குழாய்களை சேதப்படுத்தாமல், மிக எச்சரிக்கையாக மீனை, மருத்துவர்கள் அகற்றி எடுத்தார்கள். ஆனாலும், சிறுவனுக்கு தொடர்ந்து பயத்தில் ஏற்பட்ட காய்ச்சல் விடாமல், இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். உலகில், வினோதங்கள், இப்படி நாம் எதிர்பாராத வேளையில் நம்மை நிலைகுலையச் செய்து விடுகின்றன.

newstm.in

Tags:
Next Story
Share it