சொத்துக்காக அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி!!
சொத்துக்காக அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி!!

புதுக்கோட்டை மாவட்டம், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு நான்கு தம்பிகள் மற்றும் இரண்டு தங்கைகள் உள்ளனர். இவர்கள் தங்களது சொத்துகளை பிரிக்காமல் இருந்து வந்துள்ளனர்.
இதனால் இவரது நான்காவது தம்பி சிவசாமி சொத்துக்களை பிரித்து கொடுக்கும்படி அண்ணன் பழனிசாமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொத்துகளைப் பிரித்துக் கொடுக்கும்படி நேற்று மீண்டும் பழனிசாமியிடம், சிவசாமி கேட்டுள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிறகு ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சண்டை தீவிரமானதால், அண்ணன் என்றும் பாராமல் அவரை கீழே தள்ளி, கழுத்தை காலால் மிதித்தார் தம்பி சிவசாமி.
இதில் மயக்கமடைந்த பழனிசாமியை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக சொந்த அண்ணனையே தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

