Theme Check

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த தம்பியை கடப்பாரையால் குத்தி கொலைசெய்த அண்ணன் !!

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த தம்பியை கடப்பாரையால் குத்தி கொலைசெய்த அண்ணன் !!

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த தம்பியை கடப்பாரையால் குத்தி கொலைசெய்த அண்ணன் !!
X

பெண்கள் விவகாரத்தில் தம்பியை கடப்பாரையால் அண்ணன் குத்திக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே எண்கண் கிராமத்தில் ஐயப்பன் ( 26), அருண்குமார் (22) என்ற சகோதரர்கள் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். இதில் அருண்குமார் கோவையில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்ததுள்ளார். இந்த நிலையில் மூன்று நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், அருண்குமார், பெண்கள் விவகாரத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது குடும்பத்தினர் கடும் கோபம் கொண்டனர். அதாவது, அருண்குமார் விடுமுறைக்காக ஊருக்கு வரும்போதெல்லாம் ஏதேனும் பெண்கள் விவகாரத்தில் சிக்கி கொண்டு அதன்மூலம் அவரது குடும்பத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

murder

இதுகுறித்து ஏற்கனவே குடும்பத்தார் அருண்குமாரை கண்டித்துள்ளனர். எனினும் கேட்கவில்லை என்பதால், வீட்டில் இருந்த அருண்குமாரிடம் மது போதையில் வந்த அண்ணன் ஐயப்பன் இது குறித்து கேட்டுள்ளார். உன்னால் குடும்பத்திற்கு அடிக்கடி அவப்பெயர் ஏற்படுவதாகவும், குடும்பத்தில் உள்ளவர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி உள்ளதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அருகே இருந்த கடப்பாரையை எடுத்து தம்பி அருண்குமாரை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்த அருண் குமாரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அருண்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அருண்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பான புகாரில் குடவாசல் காவல்துறையினர் அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றினர்.

murder

மேலும் ஐயப்பன் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐயப்பனை கைது செய்து குடவாசல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய சொந்த தம்பியையே அண்ணன் கொலை செய்த விவகாரம் எண்கண் கிராமத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it