சென்னையை நடுங்கவைத்த கொடூர கொலை.. தம்பதி உடல்கள் தோண்டி எடுத்து விசாரணை.. 1000 நகை மீட்பு !!
சென்னையை நடுங்கவைத்த கொடூர கொலை.. தம்பதி உடல்கள் தோண்டி எடுத்து விசாரணை.. 1000 நகை மீட்பு !!

சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 1,000 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55). தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினர்.
இருவரையும் அவர்களின் கார் ஓட்டுநரான கிருஷ்ணா பிக்கப் செய்து வீட்டுக்கு அழைத்துச்சென்றார். ஆனால், இருவரும் கொடூரமாக தங்களது கார் ஓட்டுநரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வந்த இருவரையும் அவர்களது ஓட்டுநர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கியுள்ளார். பின்னர் இருவரையும் வீட்டில் வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த ஓட்டுநர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில் அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர்.
அதன்படி, தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ளபிரமாண்ட பண்ணை வீட்டில் 2 பேரின் உடல்களையும் காரின் மூலம் எடுத்துவந்து பெரிய குழி தோண்டி புதைத்தனர். பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

எனினும் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கொலையாளிகளிடமிருந்து 1000 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 9 கிலோவாகும். 60-ல் இருந்து 70 கிலோ வரையில் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர் கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில், புதைக்கப்பட்ட இருவரின் உடல்களையும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரின் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இருவரின் உடல்களையும் ஆய்வுசெய்த பிறகே கொலையாளிகள் எப்படி கொலை செய்தனர் என்ற முழு விபரம் தெரியவரும்.
newstm.in

