அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது - கமல் ட்வீட்
பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டரில்,"அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் பிற்பகல் 1.40 மணி வரை மொத்தம் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு வாசித்தார்.இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் மிக நீண்ட நேரம் உரை நிகழ்த்தி பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற தன்னுடைய சாதனையையே நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார்.பட்ஜெட் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டரில்,"அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in
Tags:
Next Story