Theme Check

பறந்து வந்து தேயிலை தோட்டத்தில் விழுந்த கார்! மக்கள் பீதி!!

பறந்து வந்து தேயிலை தோட்டத்தில் விழுந்த கார்! மக்கள் பீதி!!

பறந்து வந்து தேயிலை தோட்டத்தில் விழுந்த கார்! மக்கள் பீதி!!
X

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 200 மீட்டர் உயரத்தில் கார் ஒன்று பறந்து வந்து தேயிலை தோட்டத்தில் விழுந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. உதகை, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ்,தெலுங்கு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாகார்ஜுன் நடிக்கும் தெலுங்கு படம் சூட்டிங் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

car-ooty

இந்நிலையில் பயங்கர சத்தத்துடன் கார் ஒன்று 200 மீட்டர் தூரம் உயரத்திற்குச் சென்று பறந்து,வந்து தேயிலைத் தோட்டத்தில் விழுந்து உருண்டது. இதைப்பார்த்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சத்தம் கேட்ட பகுதியில் பொது மக்கள் கூடினர். பின்னர்தான் அந்த பகுதியில் சினிமா சூட்டிங் நடைபெற்று வருவதும், சண்டைக் காட்சிகளுக்காக கார் வெடிவைத்து தூக்கி வீசப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

newstm.in

Next Story
Share it