Theme Check

நள்ளிரவில் குளத்திற்குள் பாய்ந்த கார்.. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்..!

நள்ளிரவில் குளத்திற்குள் பாய்ந்த கார்.. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்..!

நள்ளிரவில் குளத்திற்குள் பாய்ந்த கார்.. அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்..!
X

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மாலைமடைப்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (35). இவர், சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

நேற்று இரவு குணசேகரன், மணப்பாறைக்கு சவாரி வந்து விட்டு பின்னர் நள்ளிரவு கள்ளிப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கீழ பூசாரிபட்டி பாப்பான்குளத்தின் கரையில் உள்ள வளைவில் கார் திரும்பும்போது, எதிரே வாகனம் வந்ததால் எதிர்பாராத விதமாக குணசேகரனின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 15 அடி பள்ளத்தில் சென்று குளத்தின் தண்ணீருக்குள் விழுந்தது. இந்த விபத்தில், ஓட்டுனர் குணசேகரன் அதிர்ஷ்டவசமாக காரை விட்டு வெளியேறி கரைக்கு வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, கிரேன் உதவியுடன் குளத்தில் இருந்த காரை மீட்டனர். நள்ளிரவில் கார் குளத்திற்குள் விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
Share it