பாய்ந்துவந்த கார்.. சாலையோரம் நின்ற இருவருக்கு நேர்ந்த சோகம் !!
பாய்ந்துவந்த கார்.. சாலையோரம் நின்ற இருவருக்கு நேர்ந்த சோகம் !!

சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஏ.சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (36). இதேபகுதியை சேர்ந்த செல்லவேல் என்பவரது மகன் ராகுல்காந்தி (30). இருவரும் கூலி தொழிலாளிகளாக இருந்துள்ளனர்.
நண்பர்களான இவர்கள் விருத்தாசலம் – வேப்பூர் சாலை, விளாங்காட்டூர் பழத்தோட்டம் பகுதியில் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது விருத்தாசலம் – வேப்பூர் நோக்கி சென்ற போர்டு பியாஸ்டா கார் வேகமாக வந்தது. அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருவர் மீதும் பலமாக கார் மோதியது.

இதில் ராகுல்காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த வீரமணி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். காரை பறிமுதல் செய்தனர்.
newstm.in

