ஒரே Zoom மீட்டிங்கில் 900 பேரை வேலையை விட்டு தூக்கிய CEO.. அதிர்ச்சியின் உச்சத்தில் ஊழியர்கள் !
ஒரே Zoom மீட்டிங்கில் 900 பேரை வேலையை விட்டு தூக்கிய CEO.. அதிர்ச்சியின் உச்சத்தில் ஊழியர்கள் !

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் விஷால் கார்க். இந்திய வம்சாவளியான இவர் அங்கு better.com என்ற ஆன்லைன் லோன் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு Zoom கால் மூலம் தன் நிறுவனத்தில் பணியாற்றும் 900 பேரை பணியிலிருந்து நீக்கி அதிர வைத்துள்ளார்.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் நெருங்குவதால் விடுமுறை நெருங்கும் மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் அமெரிக்கர்கள் நீண்ட விடுமுறை எடுத்து கிறிஸ்துமஸை கொண்டாடுவார்கள். இந்த விடுமுறைக்கு முன்னதாக நிறுவனம் இந்த பணி நீக்கத்தை அறிவித்துள்ளது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த 900 ஊழியர்கள் பலர் அமெரிக்காவிலும் சிலர் இந்தியாவிலும் இருக்கின்றனர்.
இது குறித்து Zoom கால் மீட்டிங்கில் விஷால் பேசியதாவது: நான் நல்ல தகவலுடன் வரவில்லை. மார்க்கெட் மாறிவிட்டது. நாமும் மார்க்கெட்டிற்கு இருக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்தார் போல் மாற வேண்டும். நீங்கள் கேட்க விரும்பாத செய்தியை தான் நான் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன். இந்த முடிவை கடினமான சூழ்நிலையில் தான் எடுத்துள்ளேன்.
என் வாழ்வில் இப்படியான முடிவை இரண்டாவது முறையாக எடுக்கிறேன். நம் நிறுவனத்தில் உள்ள 15 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோம். மார்க்கெட், திறன், வேலை பார்க்கும் அளவுகளை கணக்கிட்டு இந்த 15 சதவீத பேரை தேர்வு செய்துள்ளோம். இந்த காலில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அந்த 15 சதவீத துரதிருஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர் தான். இந்த பணி நீக்கம் இப்பொழுது முதல் அமலுக்கு வருகிறது என கூறினார்.
விஷால் Zoom கால் மீட்டிங்கில் 3 நிமிடங்களில் மட்டும் பேசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை கேட்ட அத்தனை பணியாளர்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இப்படி அறிவிக்கிறாரே என அதிர்ந்தனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பணி நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு 1 மாத சம்பளம் 2 மாதம் கவர் அப் ஆகியவைற்றை நிறுவனம் செலுத்தும் என கூறப்படுகிறது.
Vishal Garg: “I wish I didn’t have to lay off 900 of you over a zoom call but I’m gonna lay y’all off right before the holidays lmfaooo”pic.twitter.com/6bxPGTemEG
— litquidity (@litcapital) December 5, 2021
newstm.in