Theme Check

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை... தமது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்... வைரலாகும் காட்சி!

X

ரயில்வே தண்டவாளத்தில் ரயில் வரும் நேரத்தில் தவறி விழுந்த குழந்தையை, ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து ஓடிவந்து காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மராட்டிய மாநிலம் வாங்கனி ரயில்நிலையத்தில், தண்டவாளம் அருகே ஒரு பெண்ணும், அந்த பெண்ணின் கையைப் பிடித்தபடி ஒரு குழந்தையும் செல்லும்போது, குழந்தை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது.

அதேநேரம் அந்த தண்டவாளத்தில் ரயில் வந்து கொண்டிருந்ததால், அந்த பெண் ஓடிச்சென்று குழந்தையை தூக்குவதற்கு பதிலாக, சற்று தள்ளி நின்று வா..வா..என கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே, எதிரே வரும் ரயிலையும் தமது உயிரையும் பொருட்படுத்தாத, தண்டவாளத்தின் வழியே ஓடோடி வந்து குழந்தையை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:
Next Story
Share it