Theme Check

ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள ஃபர்னிச்சரை ஆன்லைனில் ஆர்டர் செய்த குழந்தை!!

ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள ஃபர்னிச்சரை ஆன்லைனில் ஆர்டர் செய்த குழந்தை!!

ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள ஃபர்னிச்சரை ஆன்லைனில் ஆர்டர் செய்த குழந்தை!!
X

2 வயது குழந்தை ஆன்லைனில் தனது தாயின் செல்போன் மூலமாக 2,000 டாலர், அதாவது ரூ 1.4 லட்சம் மதிப்புள்ள ஃபர்னிச்சரை ஆர்டர் செய்துள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. தனது தாய் வால்மார்ட் இணையத்தை பயன்படுத்துவதை கவனித்த அந்த குழந்தை, அவர் இல்லாதபோது தற்செயலாக அந்த இணையத்தில் சென்று பொருட்களை ஆர்டர் செய்தது.

புதிய வீட்டிற்கு சில பொருட்களை மட்டுமே வாங்க குழந்தையின் தாய் நினைத்திருந்தார். அனால் அவரின் மகன் அதிகளவில் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார்.

திடீரென அவர் ஆர்டர் செய்த பொருட்கள் வீட்டுக்கு வந்தபோது அவரின் பெற்றோர் ஆச்சர்யமடைந்தனர். மிகப்பெரிய பேக்கிங்கில் பொருட்கள் வந்ததை கண்டு திகைத்தனர்.

usa toddler

வால்மார்ட் கணக்கில் சென்று பார்த்தபோது, அதில் நாற்காலிகள், பூக்கூடைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையில்லாத பல பொருட்களை ஆர்டர் செய்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இது தங்கள் மகனின் குறும்பு வேலை என்பதையும் கணடறிந்தனர். தங்கள் குழந்தை அப்படி ஆர்டர் செய்ததை நினைத்து இப்போது வரை சிரித்துக் கொண்டிருப்பதாக குழந்தையின் தந்தை பிரமோத் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it