வலியால் துடித்த குழந்தை.. மெடிக்கலில் மருந்து வாங்கி கொடுத்த தாய்.. சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபரீதம்..!
வலியால் துடித்த குழந்தை.. மெடிக்கலில் மருந்து வாங்கி கொடுத்த தாய்.. சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபரீதம்..!

திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டரை மாத குழந்தை வயிற்று வலியால் துடித்துள்ளது. இதையடுத்து குழந்தையின் தாய் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் தானாகவே மெடிக்கலில் வயிற்று வலிக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமாகியுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்கள் தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும், உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வரும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
உரிய அங்கீகாரம் இல்லாமல் தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

