Theme Check

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி சிறப்பு போனஸ்! 1,59,000 ஊழியர்கள் மகிழ்ச்சி!

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி சிறப்பு போனஸ்! 1,59,000 ஊழியர்கள் மகிழ்ச்சி!

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி சிறப்பு போனஸ்! 1,59,000 ஊழியர்கள் மகிழ்ச்சி!
X

உலகம் முழுவதிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் சிறப்பு போனஸை ஹெச்.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளதால் அந்நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1 லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்கள் இந்த மாதத்திற்குள் போனஸ் பெற உள்ளனர்.

சவாலான கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஆர்வமுடனும் ஊழியர்கள் பணியாற்றியதால் அதிக வருவாய் ஈட்ட முடிந்தது என்றும், அதனால் போனஸ் வழங்கப்படுவதாக ஹெச்.சி.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனியை ஹெச்.சி.எல் நிறுவனம் 1000 ஊழியர்களை, நாக்பூர் கேம்பஸில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் கடந்த நான்கு ஆண்டுகளில் மதுரை, லக்னோ, நாக்பூர், விஜயவாடா உள்ளிட்ட மையங்களில் 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி அமர்த்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it