Theme Check

பேருந்து படியில் இருந்து இளைஞரை காலால் எட்டி உதைத்த நடத்துநர்!!

பேருந்து படியில் இருந்து இளைஞரை காலால் எட்டி உதைத்த நடத்துநர்!!

பேருந்து படியில் இருந்து இளைஞரை காலால் எட்டி உதைத்த நடத்துநர்!!
X

திருவள்ளூரில் மாநகரப் பேருந்தில் பயணியும், நடத்துநரும் தாக்கி கொள்ளும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6ஆம் தேதி செங்குன்றம் பகுதியில் இருந்து பொன்னேரிக்கு சென்ற மாநகரப் பேருந்தில் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் சென்றுள்ளார்.

அப்போது படியில் பயணித்த ஹரியை, பேருந்தின் நடத்துநர் தேவன் என்பவர் உள்ளே வரும் படி கூறியுள்ளார். அப்போதும், இளைஞர் உள்ளே வராததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

conductor1

இதில் நடத்துநரை அந்த இளைஞர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நடத்துநர் அந்த இளைஞரை தகாத வார்த்தைகளில் திட்டிக் கொண்டே தாக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக கவரப்பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். பின்னர் இருவரும் சமரசமாகி சென்றதாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it