வானில் பிறை தென்பட்டது.. நாளை முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது..!
வானில் பிறை தென்பட்டது.. நாளை முதல் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது..!

வானில் இன்று பிறை தெரிந்ததை அடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இந்த மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப்பிடிக்கப்படும். அந்தவகையில், நாளை 3-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நோன்பு கடை பிடிப்பார்கள். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும்.
இன்று மாலை பிறை தென்பட்டதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
நோன்பு என்பது சூரியன் உதிப்பதில் இருந்து சூரியன் மறையும் வரை அதாவது அதிகாலை 4 மணி அளவில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், பருகாமலும் இருப்பதாகும்.
புனித ரமலான் மாதத்தையொட்டி இரவில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். 29 அல்லது 30 நாட்கள் நோன்பின் முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.


