லாரியில் கட்டிவைத்து சாலையில் இழுத்து சென்ற கொடூரம்... பழங்குடியினர் கொடூர கொலை!
லாரியில் கட்டிவைத்து சாலையில் இழுத்து சென்ற கொடூரம்... பழங்குடியினர் கொடூர கொலை!

மத்திய பிரதேசத்தில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு இஸ்லாமிய வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் மற்றொரு இரக்கக் குணமற்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில் கன்ஹையாலால் பீல் என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது.
இதில், வாகனத்தில் இருந்த பால் கேன் சாலையில் விழுந்து அதில் இருந்த பால் அனைத்தும் வீணாக கொட்டியது. இதனால் ஆவேசமடைந்த அந்த நபர் கன்ஹையாலாலை அடித்துள்ளார். மேலும் தனது நண்பர்களை அங்கு வரவழைத்து, அவரின் கை, காலை ஒன்றாகக் கட்டியுள்ளனர்.
பின்னர் அந்த கயிறை லாரியில் கட்டி வாகனத்தை ஓட்டிள்ளனர். இதில் அவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார். இதனால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சில கிலோமீட்டர் இழுத்து சென்ற பிறகு அவரை சாலையின் ஓரேம் வீசிவிட்டுச் அந்த கும்பல் சென்றுவிட்டது.
இந்த கொடூர சம்பவத்தை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
मध्यप्रदेश के नीमच जिले के सिंगोली थाना क्षेत्र में एक भील आदिवासी युवक को चोर समझकर तालिबानी भीड़ ने पीटा। फिर ट्रक से बाँधकर कई किलोमीटर तक घसीटा। अंत में मौत हो जाती है। कानून हाथ में लेकर इस तरह से हत्या कर देना शर्मनाक है। सभी दोषियों पर कड़ी कार्रवाई हो। @ChouhanShivraj pic.twitter.com/MZ1qKWwPVG
— Hansraj Meena (@HansrajMeena) August 28, 2021
பிறகு, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்ஹையாலா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

