உயிர் நண்பனை கொன்று உடலை 30 துண்டுகளாக வெட்டி புதைத்த கொடூரம் !!
உயிர் நண்பனை கொன்று உடலை 30 துண்டுகளாக வெட்டி புதைத்த கொடூரம் !!

நெருங்கிய நண்பரை கொலை செய்து 30 துண்டுகளாக உடலை வெட்டி புதைத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லந்தஷஹர் - ஹபூர் சுங்கச்சாவடி அருகே முகமது இர்ஃபான், என்பவர் ஃபாஸ்ட்டேக் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது நெருங்கிய நண்பர் ரகீப், அந்த கடைக்கு அருகே உணவகம் நடத்தி வருகிறார்.
இவர் இர்ஃபானின் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இவர்கள் சேர்ந்து மொஹம்மது அகிப் என்பவரை கடையை கவனித்துக் கொள்ள அமர்த்தியுள்ளனர். இதனிடையே தொழில் கூட்டாளிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ரகீப் தான் முதலீடு செய்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். இல்லையென்றால் கடையை தானே எடுத்துக் கொள்வதாகவும் மிரட்டியுள்ளார். இதற்கு இர்ஃபான் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் இர்ஃபானை கொல்ல ரகீப் திட்டமிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். கடந்த 18ஆம் தேதி இர்ஃபான் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடியுள்ளனர். எனினும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அவரது குடும்பத்தினர், இறுதியாக அவர் ரகீப் மற்றும் அகீப்புடன் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனைக் கொண்டு காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர், ஆரம்பத்தில் ரகீப் மற்றும் அகீப் ஆகிய இருவரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி ஏமாற்ற முயன்றனர். பிறகு காவல்துறையினர் தக்க முறையில் விசாரணை நடத்தியதில் இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். விசாரணையில், இர்ஃபானைக் கொன்று அவரது உடலை 30 துண்டுகளாக வெட்டி, மிக ஆழத்தில் புதைத்துவிட்டனர். இதனால் கண்டுபிடிக்க முடியாது என நினைத்ததாக கூறினர்.

எனினும் பள்ளம் தோண்டி புதைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

