Theme Check

சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து.. பலரும் காயம்.. சிலர் கவலைக்கிடம் !!

சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து.. பலரும் காயம்.. சிலர் கவலைக்கிடம் !!

சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து.. பலரும் காயம்.. சிலர் கவலைக்கிடம் !!
X

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 15 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரின் தாராவியில் இன்று பயங்கர சிலிண்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் மொத்தம் 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இது குறித்து தெரிவித்த மும்பை மாநகராட்சி நிர்வாகம், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள சியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

cylinder-blast

எரிவாயு சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தாராவியிலுள்ள ஷாஹு நகரில் இன்று பகல் 12.28 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்த 15 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 10 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கு பிறகு தீயணைப்பு குழுக்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கின. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு ஜம்போ தண்ணீர் டேங்கர் குடிசை வார்டு நிலை ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அவர்கள் போராடி அடுத்த 15 நிமிடத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.

cylinder-blast

மேலும், இந்த விபத்து குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சிலிண்டர் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it