Theme Check

இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா!!

இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா!!

இந்தியாவில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா!!
X

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,293 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 4,27,15,193 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரு நாளில் 17 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 5,24,890 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 79,313 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

corona

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.61 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. கொரோனா பரவல் வாராந்திர சதவீதம் 4.32 ஆகவும், மாதாந்திர சதவீதம் 2.62 ஆகவும் உள்ளது.

இதுவரை 196.32 கோடி தடுப்பூசி டோஸ்கள் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it