Theme Check

நிரம்பும் அணை.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

நிரம்பும் அணை.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!

நிரம்பும் அணை.. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!
X

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையின் பாதுகாப்பை கருதி, தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு1,20,000 கன அடி அளவிற்க்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது.

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் ஒரு லட்சத்து 9 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிவருகிறது. ஒகேனக்கல் பகுதிகளில் அருவிகளை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

metur dam

இதனிடையே, தொடர் நீர் வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்தது. தற்பொழுது நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும். ஆற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it