மிக பிரபல நடிகர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!
மிக பிரபல நடிகர் மரணம்! சோகத்தில் திரையுலகம்!

நடிகர், இயக்குனர், வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்ட பிரபல நடிகர் பாலச்சந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன், பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

மலையாள திரையுலகில் 1991ம் ஆண்டு வசனகர்த்தாவாக அறிமுகமான பாலசந்திரன், மோகன்லால் நடித்த ‘அங்கிள் பன்’ படத்தின் வசனங்கள் மூலமாக மிக பிரபலமானார். அதன் பின்னர் அக்னிதேவன், உள்ளடக்கம், பவித்தரம், புனர்திவசம், காமாத்திபாடம் போன்ற பல படங்களுக்கும் திரைக்கதை எழுதினார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும், இயக்கவும் செய்தார். இவரது இயக்கத்தில் உருவான இவன் மெகரூபன் படம் பல விருதுகளை பெற்றது.

