ஒரு நொடியில் மகன் எடுத்த முடிவு.. கடலில் விழுந்து தந்தை, தாய் தற்கொலை !!
ஒரு நொடியில் மகன் எடுத்த முடிவு.. கடலில் விழுந்து தந்தை, தாய் தற்கொலை !!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சமத்தூர் எஸ்.பொன்னாபுரம் கிராமத்தில் வசித்து வந்தனர் கோவிந்தராஜ் (62), தனலட்சுமி (59) தம்பதி. கோவிந்தராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர்களின் ஒரே மகன் கனீஸ் பிரபாகரன் (22). ஐ.டி. நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு தந்தை கோவிந்தராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த பிரபாகரன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பாசமாக வளர்த்த ஒரே மகனும் சென்றதால் கோவிந்தராஜும் அவரது மனைவியும் பெரும் சோகத்திலும், மனவேதனையிம் இருந்துவந்தனர்.

இந்த நிலையில், தங்களது மகன் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டு இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அவரது பெற்றோர், ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் இரு உடல்கள் மீட்பதை கண்ட பக்தர்கள், இதுகுறித்து உடனடியாக ராமேஸ்வரம் கடலோர போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் கடலோர போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கடலில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்க முயன்ற போது, இருவரது உடல்களும் துணியால் சேர்த்து கட்டப்பட்டது தெரியவந்தது. இதில், கோவிந்தராஜ் சட்டைப்பையில் அவரது ஆதார் நகல் இருந்ததால் அவர்கள் யார் என அடையாளம் காண போலீசாருக்கு துருப்பாக அமைந்தது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, முதியவர்கள் இருவரும் தங்களது உறவினர்களுக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு, தாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு குறித்து தெரிவித்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.
இதற்கிடையே தற்கொலை முடிவை எடுக்கும் முன்பு தாங்கள் வசித்த வீட்டில் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை கோவை மாவட்டம் கோட்டூர் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, ஒரே மகன் இறந்ததால் எங்களுக்கு வாழ பிடிக்கவில்லை. எங்களின் சொத்துக்களை தனிப்பட்ட முறையில் யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே நாலுபேருக்கு நல்லது செய்வதற்காக மகன் கனீஸ் பிரபாகரன் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதில், கோவையை சேர்ந்த 4 பேர்களை நியமித்து உள்ளதாக அந்த கடிதத்தில் குறிபிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
newstm.in

