Theme Check

பாம்பை கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய்!!

பாம்பை கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய்!!

பாம்பை கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய்!!
X

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி கிராமத்தில் வசித்து வரும் சரவணன் என்பவருக்கு நாய்கள் என்றால் ரொம்பவும் பிரியம். இவர் வீட்டில் 4 நாய்களுக்கும் மேல் வளர்த்து வருகிறார்.

அதில் செவலை என்கிற நாய் மிகவும் நன்றியுள்ள நாயாகவும் துடிப்பாகவும் இருந்துள்ளது. மேலும் சரவணன் வளர்த்துவரும் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க செல்லும்போது காளையின் கூடவே சென்று வீட்டிற்கு மீண்டும் கூட்டிக்கொண்டு வரும் இந்த செவலை.

இந்நிலையில் கடந்த புதனன்று மாலை நேரத்தில் குழந்தைகள் வீட்டு வாயிலில் விளையாடிக் கொண்டிருந்த போது நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. இதனை கண்ட செவலை நாய் முதலில் குரைத்து விரட்ட முயன்றுள்ளது.

svg dog 1

ஆனால் பாம்பு வெளியே செல்லாததால் அதன் மீது பாய்ந்து கடித்துள்ளது. இதில் பாம்பு இறந்து விட்டது. ஆனாலும் பாம்பு தீண்டியதால் நாயும் மயங்கி விழுந்தது. இதனை கண்ட குழந்தைகள் கூச்சலிட்டனர்.

இதனையடுத்து பெரியவர்கள் வந்து நாய் செவலையை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நாய் ஏற்கனவே இறந்துவிட்டாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனால் கண்ணீர் வடித்த குடும்பத்தினர் நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர். குழந்தைகளின் உயிரை காக்க தன்னுயிரை நீர்த்த நாய் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it