Theme Check

இளைஞரின் கனவு.. காவலர்களின் கனிவு.. உணவு டெலிவரி இளைஞருக்கு நடந்த நெகிழ்ச்சி !

இளைஞரின் கனவு.. காவலர்களின் கனிவு.. உணவு டெலிவரி இளைஞருக்கு நடந்த நெகிழ்ச்சி !

இளைஞரின் கனவு.. காவலர்களின் கனிவு.. உணவு டெலிவரி இளைஞருக்கு நடந்த நெகிழ்ச்சி !
X

மிதிவண்டியில் சென்று உணவுப் பொருள்களை விநியோகித்து வந்த இளைஞருக்கு காவல் துறையினா் இணைந்து மோட்டாா் சைக்கிளைப் பரிசாக அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினா்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் விஜய் நகா் பகுதியில் இளைஞர் ஒருவர் சைக்கிளில் பயணம் செய்து உணவு டெலிவரி செய்துள்ளார். குறிப்பிட்ட நகர் பகுதியில் அந்த இளைஞரை நாள்தோறும் காணமுடியும். வியர்க்க விறுவிறுத்து எதே ஒரு பாரத்தையும் சுமர்ந்துகொண்டு இளைஞர் செல்வதை போலீசாரும் கவனித்துள்ளனர்.

mathiya pradesam delivery boy bike

பின்னர் அந்த இளைஞர் குறித்து விசாரிக்கையில், 22 வயது இளைஞா் ஜெய் ஹல்தே என்பதும் பைக் வாங்க வீட்டில் வசதி இல்லாத காரணத்தால் அவா் சைக்கிளில் சென்று உணவு விநியோகித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. .

பின்னர் ஒருநாள் அவரிடம் விஜய் நகா் பகுதியில் காவல் ஆய்வாளா் தஹஜீப் காஜி விசாரித்தபோது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக பைக் வாங்க முடியாமல் சைக்கிளில் சென்று உணவு விநியோகிப்பதாகத் தெரிவித்தாா். தனது சக காவலா்கள் சிலரிடம் அந்த இளைஞரின் நிலை குறித்து காஜி கூறினாா். இதையடுத்து, அந்த காவலா்கள் அனைவரும் இணைந்து இளைஞருக்கு மோட்டாா் சைக்கிள் வாங்க உதவலாம் என முடிவெடுத்தனா்.

mathiya pradesam delivery boy bike

இது தொடா்பாக அவரிடம் கூறியபோது, முன்பணத்தை மட்டும் செலுத்தி மோட்டாா் சைக்கிள் வாங்கிக் கொடுத்தால் போதுமானது என்றும் மீதியுள்ள பணத்தை மாதத் தவணையில் தாமே செலுத்திவிடுவதாகவும் ஜெய் ஹல்தே கூறினாா். இதன்காரணமாகவும் அந்த இளைஞரை போலீசாருக்கு பிடித்துப்போக உடனே காவலா்கள் முன்பணத்தை செலுத்தி பைக் வாங்கி கொடுத்தனர்.

இனி தனது குடும்பத்துக்காக அதிகளவில் சம்பாதிக்க முடியும் என அந்த இளைஞர் காவலர்களுக்கு நன்றியோடு கூறினார். மேலும், சைக்கிளில் சென்றால் தினமும் 6 முதல் 8 உணவு பார்சல்கள் மட்டுமே விநியோகிக்க முடியும். இனி 15 முதல் 20 விநியோகங்களைச் செய்ய முடியும் என்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

காவல்துறையினரின் இந்த செயல் இந்தியா முழுவதும் பரவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it