Theme Check

பேருந்தை 10 நிமிடம் ஓரமாக நிறுத்திவிட்டு வாக்களித்த ஓட்டுநர்!!

பேருந்தை 10 நிமிடம் ஓரமாக நிறுத்திவிட்டு வாக்களித்த ஓட்டுநர்!!

பேருந்தை 10 நிமிடம் ஓரமாக நிறுத்திவிட்டு வாக்களித்த ஓட்டுநர்!!
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓட்டுனர் ஒருவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு வாக்களித்த சம்பவம் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 1 நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கு நடைபெற்றது. அதில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லபுரம் பேரூராட்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

பொ.மல்லாபுரம் 5வது வார்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை பணிக்கு சென்ற ஸ்ரீதர் பாலக்கோட்டில் இருந்து சேலத்திற்கு பொதுமக்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.

bus driver

அப்போது செல்லும் வழியில் தனது வாக்குப்பதிவு மையமான பொ.மல்லாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வந்தவுடன் பேருந்தில் இருந்த பயணிகளிடம், ஜனநாயக கடமையை செய்து விட்டு வருகிறேன். 10 நிமிடம் பொறுத்திருங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

பேருந்தில் பயணித்த பயணிகள் நீங்கள் வாக்களித்து வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். நீங்கள் வாக்களித்துவிட்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தனர்.

பின்னர் ஸ்ரீதர் வாக்களித்துவிட்டு பயணிகளுக்கு நன்றி தெரிவித்து, சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றார். இச்செயலால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்தப் ஓட்டுனரை வெகுவாக பாராட்டினர்.

newstm.in

Next Story
Share it