புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது !
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது !

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது .
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அங்கு சிறப்பு தரிசனங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது
ஆனால், கொரோனா பரவல் காரணமான முன்னதாக தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது. ஆனால் தேர் திருவிழாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பக்தர்கள், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் நேற்று இரவு அனுமதி அளித்தது. அதன்படி இன்று அதிகாலையில் இருந்தே தேரோட்டத்திற்கான வேலைகள் நடைபெற்றன.

இந்நிலையில் ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
பிள்ளையார், முருக பெருமான், நடராஜர் தேர் உள்ளிட்ட ஐந்து தேர்தல் நான்குரத வீதிகள் வழியாக பக்தர்களால் இழுத்துச் செல்லப்படும். மதியம் வரை தேரோட்டம் நடைபெறும். நடராஜர் தேரில் மூலவர் சாமி காட்சி தருவார். இதனால் புகைப்படங்கள் எடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
newstm.in

