தறிகெட்டு சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய மின்சார பேருந்து..!!
தறிகெட்டு சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய மின்சார பேருந்து..!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று இரவு மின்சார பஸ் ஒன்று பிரேக் பழுதானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. டாட் மில் கிராஸ் ரோடு பகுதியில் பஸ் வேகமாக சென்று முன்னே சென்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது.
அதன்பின்னர் சாலையோரம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மின்சார பஸ் மோதியது. இறுதியில் அந்த பஸ் , டேங்கர் லாரி மீது மோதி நின்றது.
இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய மின்சார பஸ் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

