Theme Check

விடாமல் துரத்திய யானை! உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்!!

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் இளைஞர் ஒருவரை விடாமல் துரத்திச் சென்ற யானை ஒன்று அவரை மிதித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென்னை கிராமத்தை விஜயன், அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் பட்டவயல் அருகே வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியது.

விடாமல் துரத்திய யானை! உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்!!
X

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் இளைஞர் ஒருவரை விடாமல் துரத்திச் சென்ற யானை ஒன்று அவரை மிதித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பென்னை கிராமத்தை விஜயன், அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் பட்டவயல் அருகே வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக திடீரென வந்த காட்டு யானை ஒன்று இருவரையும் துரத்தியது. அவர்கள் வெகுதூரம் ஓடிய பின்னரும் யானை விடவில்லை. இந்நிலையில் விஜயனை நெருங்கிய யானை தும்பிக்கையால் அவரை தூக்கி வீசியது. கீழே விழுந்த அவரை காலால் மிதித்து கொன்றது.

விடாமல் துரத்திய யானை! உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்!!
அதன்பிறகு யானை சுரேஷை துரத்த ஆரம்பித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விஜயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். யானை மிதித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it