Theme Check

உடல் மெலிந்த சிறுமி குணமடைந்தார்.. வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர்..!

உடல் மெலிந்த சிறுமி குணமடைந்தார்.. வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர்..!

உடல் மெலிந்த சிறுமி குணமடைந்தார்.. வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர்..!
X

செங்கோட்டையில், பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல் மெலிந்த சிறுமி குணமடைந்தார். அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 6 வயது சிறுமி இசக்கியம்மாள். இவர், கடந்த ஆண்டு தவறுதலாக பிளீச்சிங் பவுடர் உட்கொண்டதால் உடல் மெலிந்து மிகவும் பாதிப்படைந்து காணப்பட்டார்.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் சிறுமியை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், இன்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், செங்கோட்டையில் உள்ள சிறுமி இசக்கியம்மாள் வீட்டிற்கு சென்று சிறுமியை மடியில் தூக்கி வைத்து அவரிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுமியை மடியில் அமர வைத்து பேசியது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story
Share it