பிரபல குணசித்திர நடிகர் காலமானார்! சோகத்தில் திரையுலகினர்!!
நடிப்பு மற்றும் பாடலில் கொடி கட்டி பறந்த ராகவேந்தர் காலமானார்! எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால்தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாளில் ரேவதி அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான்

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்தர் இன்று சென்னையில் காலமானார்!
1980களில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். பிரபல இசையமைப்பாளராகவும் திரையுலகில் திகழ்ந்து வந்தவர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால் தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் நடிகை ரேவதியின் அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே அவரே தான்.
இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். 1980ல் வெளிவந்த யாக சாலை என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களை இவர் பாடியுள்ளார். அழகு மலராட... பாடலில் ஜதி சொல்லுவதில் இருந்து, வருஷம் 16 படத்தில் வரும் ஏய் அய்யாச்சாமி உள்ளிட்ட பாடல், தனிப்பாடலாக உச்சஸ்தாயியில் பாடிய பாக்கு கொண்டா வெத்தலை கொண்டா.. உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.
திருமதி பழனிச்சாமி படத்தில் இடம்பெற்ற அம்மன் கோவில் வாசலிலே என்ற பாடலையும் பாடியுள்ளார். போற போக்கில் யதார்த்தமாக பாடுகிற டி.எஸ் ராகவேந்தர் ஒரு பின்னணி பாடகர் என்பது பலரும் அறிந்திராதது. தந்துவிட்டேன் என்னை, சிந்து பைரவி, அண்ணா நகர் முதல் தெரு, விக்ரம், சொல்லத்துடிக்குது மனசு, கற்பூர முல்லை, இளையவன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும் என்றே சூரிய புத்ரிக்கு போன்ற சில மலையாளப் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தனது யதார்த்தமான நடிப்பால், நடிக்கும் கதாபாத்திரத்திற்கு நேர்மையாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தவர் டி.எஸ்.ராகவேந்தர்.
இவரது மகள் கல்பனா ராகவேந்தரும் பிரபல பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. தனது வயோதிகம் காரணமாக எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வந்த டி.எஸ்.ராகவேந்தர் இன்று காலமானார்.
newstm.in

