கொரோனா நிதியாக ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கிய பிரபல நிறுவனம் !!

கொரோனா நிதியாக ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கிய பிரபல நிறுவனம் !!

கொரோனா நிதியாக ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கிய பிரபல நிறுவனம் !!
X

முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரணப் பணிக்கு பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைகா சார்பில் ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், படுக்கைகள், ஆச்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் தடுப்பூசி போன்றவற்றின் தேவைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுத்து உதவ வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.



இதையடுத்து, அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை ஆன் லைன் பரிவர்த்தனை மூலமாகவும், நேரடியாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில், லைகா நிர்வாகி தமிழ்குமரன் மற்றும் நிருதன், கெளரவ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரணப் பணிக்காக ரூபாய் 2 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

Tags:
Next Story
Share it