பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் திடீர் மரணம் ! திரையுலகினர் அதிர்ச்சி

பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் திடீர் மரணம் ! திரையுலகினர் அதிர்ச்சி

பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குநர் திடீர் மரணம் ! திரையுலகினர் அதிர்ச்சி
X

நடிகர் கமல் ஹாசன் நடித்த கல்யாண ராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மகராசன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஜி.என். ரங்கராஜன். மேலும் பல படங்களுக்கு பணியாற்றியுள்ளார். இதனால் 80's. 90's-களில் தமிழ் திரையுகில் பெரிய பெரிய நடிகர்களின் பிரதானமாக தேர்வாகவும் இருந்துள்ளளார் ஜி.என்.ரங்கராஜன்.

இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று காலை 8.45 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90. ஜி.என். ரங்கராஜனின் மகன் ஜி.என்.ஆர். குமரவேலன். இவர் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாஹா ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

ரங்கராஜனின் மரண செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ரங்கராஜன் கமலுக்கு மட்டும் அல்ல மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் நெருக்கமானவர்.

இந்த ஆண்டு திரையுலகம் பல திறமைசாலிகளை இழந்துவிட்டது. தினமும் மரண செய்தியாக இருக்கிறதே என்று ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர். நடிகர் விவேக், இயக்குநர்கள் எஸ்.பி ஜனநாதன், தாமீரா, நடிகர் பாண்டு, நெல்லை சிவா என பலரும் உயிரிழந்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it